Posts

கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சில வழிகள்.........!!!!!!!!!

Image
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பலப்பல! சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். ஆனால்  கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில்  கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால்,அதற்கான அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.                                            கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் தெரியுமா? கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி...

முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!

Image
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் ஒரு காரணம், இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை ஆகும். முடி ஏன் உதிர்கிறது? தலைமுடி உதிர்வதற்கான அடிப்படைக் காரணமாக தலை யின் மீதுள்ள உறைப்பைகளில் ஹார்மோன் சுரப்பு நின்று போவதையே கூறினாலும், பல துணைக் காரணங்களும் உள்ளன.அவைகளில் முக்கியமானவை புரதச்சத்துப் பற்றாக்குறை (Protein deficiency) இரும்புச்சத்துப் பற்றாக்குறை (Iron deficiency) துத்தநாகப் பற்றாக்குறை (Zinc deficiency) புரதச்சத்துப் பற்றாக்குறை (Protein deficiency) : தலைமுடி வளரவும், பாதுகாக்கப்படவும், புரதம்  தலைப் பகுதியில் சேகரித்து வைக்கப் படுகிறது. புரதம் உயிர் வளர்க்கும் சத்துக்களில் தலையாயது.  அது பற்றாக்குறை ஆகும் போது தலைமுடிக் கொத்தின் அமைப்பு சிதறுகிறது. சில சமயங்களில் அதன் நிறமும் மாறும்.  முடிகளின் வேர்களில் வலிமை குறைந்துவிடுவதால் அவை முழுமையாக உதிர் ந்துவிடும். ...

அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!

Image
பெப்டிக் அல்சர் ( Peptic ulcer ) அல்சர் என்பது வயிற்றுப்பகுதியில் அமில அரிப்பினால் ஏற்படக்கூடிய புண்ணைக்குறிக்கும். நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது.  இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மெல்லிய படலத்தை (Mucus Membrane) அரிக்கிறது. இதன் விளைவாக குடலில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பு பெரும்பாலும்  ஹெலிகோபேக்டர் பைலோரி எனப்படும் பாக்டீரியாக்களின் மூலமாகவும் ஆஸ்பிரின் உட்பட பிற வலி நிவாரண மாத்திரைகளாலும் ஏற்படக்கூடும்.                                       பெப்டிக்அல்சரின் வகைகள் : வயிற்றுப்புறணியில் (Stomach Lining) ஏற்படும் அல்சருக்கு காஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்று பெயர். வயிற்றின் மேல்பகுதியில் உணவுக்குழாயின் அடிப்பகுதியின் உள்ளெ ஏற்படும் அல்சருக்கு ஈஸோபாகேல் அல்சர் (Oesophageal Ulcer) என்று பெயர். வயிறையும் சிருக்குடலையும் இணைக்கின்ற வளைந்த உறுப்பான டியோடினத்தில் ஏற்படும் அல்...

Herbal Remedies to Control Psoriasis

Image
சொரியாசிஸ் ( Psoriasis) சரும நோய் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சொரியாசிஸ்தான்.  காளாஞ்சகப்படை (psoriasis) என்பது தோலில் ஏற்படும், ஒரு நீடித்த, தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும். இதை  'மீன் செதில் படை' என்றும் அழைக்கலாம். இது ஒரு இடத்தில வந்துவிட்டால் தொடர்ந்து அருகில் உள்ள இடங்களுக்கு பரவும்.  "சொரியாசிஸ் பாதிக்கப்பட்டவரின் உடலில் மட்டுமே பரவக்கூடியது. எனவே, இதுவொரு தொற்று நோயன்று”. ஒரு முறை வந்த பின் தீராத  நோய்கள் வரிசையில் முதலிடத்தில்  இருக்கும் நோய் இந்த சொரியாசிஸ் நோயாகும் சொரியாசிஸ் நோயின் அறிகுறிகள்: காதுக்கு பின் அல்லது நெற்றியில் அல்லது உடலில் சில இடங்களில் அல்லது உடல் முழுவதும் உலர்ந்த புண்கள். அரிப்பு, அதிலிருந்து மீன் செதில் போல பொடுகு உதிர்தல், மேலும் அரிப்பு ஏற்படும் இடங்களைச் சொரிந்தால் இரத்தக் கசிவு. உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் பிளேடால் வெட்டியது போன்ற வெடிப்பு, அரிப்பு, தோல் உரிதல். சிலருக்கு இதில் ௯றப்பட்டுள்ள எல்லா அறிகுறிகளும் இருக்கலாம். சிலருக்கு ஒரு சில அறிகுறிகள் மட்டும் இருக்கலாம். சொரியா...

ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!

Image
இதய நோய் இதயத் தமனிகள் மெல்லியதாதல் அல்லது அவற்றில் தடை ஏற்படுவதே இதய நோய் எனப்படுகிறது . இந்த இதய நோயை ருமாட்டிக் என்ற காய்ச்சல் தான் உருவாக்குகிறது. சிறு வயதில் இதய நோய் தாக்கி இருந்தாலும் தெரிவதில்லை. 15 வயதுக்கு மேல் தான் இது தெரியவருகிறது. இந்தியாவில் கிராமப் புறங்களை விட நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் தான்  அதிகமாக இதய நோயால் மரணமடைகிறார்கள். இதய நோய் இன்று மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகவும், மற்றும் வாழ்க்கை தொடர்பான கோளாறுகள் காரணமாக மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கிறது இதயம் எப்படி செயல்படுகிறது? மனிதனின் நெஞ்சுக்கூட்டில், இடது பக்கத்தில்  இதயம் உள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை அனுப்பும் ஒரு 'பம்ப்’. உடல் முழுவதிலும் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பெறும் இதயம், அதை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல் ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை பிரித்து ஆக்சிஜனை சேர்த்து மீண்டும்  இதயத்துக்கு அனுப்புகிறது.  இதயம், அதை உடல் முழுவதும் அனுப்புகிறது. இதயநோய்கள் ...

Asthma causes, symptoms and Herbal medicines for Asthma

Image
What is meant by asthma: Asthma is an inflammatory disease of the airways to the lungs. It makes breathing difficult and can make some physical activities difficult or even impossible. Symptoms of asthma: Asthma can have symptoms like Coughing, wheezing, difficulty in breathing, chest tightness, pain or pressure.  Not everyone with asthma will have the same symptoms, they may not have all of these symptoms or may have different symptoms at different times. Asthma symptoms may also vary from one asthma attack to the next, being mild during one and severe during another. Causes of Asthma : Asthma causes difficulty in breathing. It is triggered when there is an obstruction in the flow of air in the lungs. It is caused by allergies, air pollution, respiratory infections, weather conditions, food and specific medications. Effect of asthma on pregnancy A lot of hormone changes happen during pregnancy, and some of them can affect your lungs. Can Asthma A...