கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்த சில வழிகள்.........!!!!!!!!!
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பலப்பல! சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.
ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம்.
ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால்,அதற்கான அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.
கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் தெரியுமா?மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.
ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம்.
ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால்,அதற்கான அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்
- கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
- கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அலர்ஜி . உங்களுக்கு கல்லீரல் அலர்ஜி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
- கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.
- உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
- கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
- கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
வயிறு வீக்கம்
- கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் சில பழக்கவழக்கங்கள்
- மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை நிறுத்த வேண்டும். அதே போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
- அதிக அளவு மது அருந்தும்போது, ஆல்கஹாலில் இருக்கும் சில வகை வேதிப்பொருட்கள், கல்லீரலின் பணிகளைப் பாதிக்கின்றன. ஒரு கட்டத்தில், கல்லீரல் சிதைவடைந்து, கல்லீரல் சுருக்க நோய் ஏற்படுகிறது.
- மதுவைத் தவிர்த்தால், பெரும்பாலான கல்லீரல் பிரச்சனைலிருந்து விடுபடலாம்.
- கொழுப்பு உணவுகள் விஷயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். ஏனெனில் கல்லீரலின் முதல் எதிரி இவை தான். கொழுப்பு உணவுகள் மூலமாக உடலில் சேரும் அதிக பட்ச கொலஸ்ட்ரால், கல்லீரலின் இயக்கத்தை பலவிதங்களில் பாதித்து சேதப்படுத்திவிடும்.
- கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
- பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதாலும் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, விடும் வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டானிக் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.
இவை மட்டுமல்லாமல் இயற்கை தாவரங்களின் மூலம் பண்டைய கால முறைப்படி மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சித்தர்களின் ஆலோசனைப்படி எங்களது ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்த லிவர் டானிக் செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த நிவாரணியாக உள்ளது .
- உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.
- ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது என்பதால், அடிக்கடி லிவர் டானிக்கை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற நச்சுகள் வெளியேறி ரத்தம் தூய்மையாகும்.
- உடலைக் குளிர்ச்சியாக்கக்கூடியது .
இந்த Liver Tonic - யில் பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன . அவை
குறிப்பு:
- Phyllanthus niruri - கீழாநெல்லி
- Eclipta prostrata - கரிசிலாங்கண்ணி
- Tribulus terrestris - நெருஞ்சி
- Piper longum - திப்பிலீ
- Piper nigrum - குறுமிளகு
- Emblica officinalis - நெல்லிக்காய்
- Saccharum officinarum - கரும்பு
குறிப்பு:
- கல்லீரல் நோய்களிலிருந்து விடுபட , உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன் இயற்கை மருந்துகளை உட்கொள்வதன்மூலம் கல்லீரல் சிக்கல்களை குணப்படுத்தி விட முடியும்…!!
Comments
Post a Comment