ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!


இதய நோய்

இதயத் தமனிகள் மெல்லியதாதல் அல்லது அவற்றில் தடை ஏற்படுவதே இதய நோய் எனப்படுகிறது.
இந்த இதய நோயை ருமாட்டிக் என்ற காய்ச்சல் தான் உருவாக்குகிறது. சிறு வயதில் இதய நோய் தாக்கி இருந்தாலும் தெரிவதில்லை. 15 வயதுக்கு மேல் தான் இது தெரியவருகிறது.
இந்தியாவில் கிராமப் புறங்களை விட நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் தான்  அதிகமாக இதய நோயால் மரணமடைகிறார்கள்.
இதய நோய் இன்று மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகவும், மற்றும் வாழ்க்கை தொடர்பான கோளாறுகள் காரணமாக மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கிறது


இதயம் எப்படி செயல்படுகிறது?

மனிதனின் நெஞ்சுக்கூட்டில், இடது பக்கத்தில்  இதயம் உள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை அனுப்பும் ஒரு 'பம்ப்’. உடல் முழுவதிலும் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பெறும் இதயம், அதை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல் ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை பிரித்து ஆக்சிஜனை சேர்த்து மீண்டும்  இதயத்துக்கு அனுப்புகிறது. 


இதயம், அதை உடல் முழுவதும் அனுப்புகிறது.

இதயநோய்கள்

  • நெஞ்சுவலி
  • மாரடைப்பு
  • சீரற்ற இதயத்துடிப்பு

இதய நோயின் அறிகுறிகள்

இதய நோயின் முக்கியக் கூறு நெஞ்சுவலியும், மாரடைப்பும் ஆகும். இதயத்துக்குத் தேவையான இரத்தம் கிடைக்காத போது வலி உண்டாகிறது.அந்த வலியின் அளவு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும்.
நெஞ்சு எலும்புக்கு அடியில் மட்டுமல்லாமல் கழுத்திலும், புயங்களிலும், வயிற்றிலும் அல்லது மேல்முதுகிலும் அசௌகரியமான உணர்வு ஏற்படும்.
மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு வலி, நெஞ்சில் அழுத்தம், கடினமானத் தன்மை இருக்கும். கை, கழுத்து, தாடை மற்றும் முதுகுப் பகுதியிலும் வலி ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வியர்வை, மயக்கம், வாந்தி அல்லது குமட்டல் ஏற்படும். மேலும் அதிகப்படியான சோர்வு, மனப்பதற்றம் மற்றும் மூச்சுத்திணறலுடன் கூடிய சீரற்ற அல்லது அதிவேக இதயத்துடிப்பு ஏற்படும்.
பொதுவாக உடல் வேலை செய்யும் போதும் உணர்ச்சிவசப்படும்போதும் வலி தோன்றும். ஓய்வு எடுக்கும்போது மூச்சடைப்பதும்  உடல் வேலையின் போது களைப்பு ஏற்படுவதும் இதன் பிற அறிகுறிகள் ஆகும். பெண்கள், வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் நெஞ்சுவலி தவிர கீழ்க்காணும் அறிகுறிகளையும் உணர்வார்கள்:
  • களைப்பு
  • மூச்சடைப்பு
  • பொதுவான பலவீனம்

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன.

முதலாவது ஒலி :
  • இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறைகளான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.
  • முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களினால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.
இரண்டாவது ஒலி :
  • கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப்போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.
  • ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போதும் ஒலியின் அளவு குறைவாக இருக்கும்
மூன்றாவது ஒலி :
  • இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும் போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாய்ந்தால் ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத்தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.
  • முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றாவது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.
நான்காவது ஒலி :
  • மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மெல்லியதாகும். வென்ட்ரிகிள் அறை விரிந்த நிலையில் உள்ளபோதும், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.
  • இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி விறைத்துப்போதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

மாரடைப்புக்கான அறிகுறிகள் என்ன?

மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வது மிக முக்கியம். இதோ சில:

  •  நெஞ்சு வலி அல்லது எரிச்சல் மற்றும் அழுத்தம்
  •  கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் அசௌகரியம்.
  •  மூச்சுத் திணறல்
  •  வாந்தி
  •  வியர்த்தல்
  •  உடல் குளிர்ச்சியடைதல்

இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள்:
  • வயது 65-க்கு மேற்பட்டோருக்கு இருபாலருக்குமே மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
  • ஆண்களுக்கு இளம் வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் வரும் வாய்ப்பு அதிகம்.
  • மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.
இயற்கை மருந்து
  • உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்தின் பின்னால் ஓடாமல் நம் முன்னோர் பயன்படுத்திய இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் நோய்நொடியின்றி வாழலாம்.
இதய வலி குணமாக:
  • துளசி விதை 100 கிராம் பன்னீர் 125 கிராம் சர்க்கரை 25 கிராம் நன்றாக கலக்கி இரண்டு வேலை சாப்பிடவும்
இதய நோய் குணமாக:
இதய பலகீனம்:
  • செம்பருத்திப் பூ பொடி அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் இதய பலகீனம் குணமாகும்
இதய நோய்கள் குணமாக:
  • துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலையும் மாலையும்  48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.
மார்பு வலி:
  • இஞ்சி சாறு எலுமிச்சை சாறு தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்
இதய படபடப்பு குறைய:
  • மாசிக்காயை பால்விட்டு உரசி காலை மாலை இரு வேலை அரைகிராம் நாவில் சுவைக்கலாம்.

இதய நோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள்

ஒருவருக்கு இதய ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக செயல்பட முடியும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்.
வால்நட்ஸ்
  • ஒவ்வொரு நாளும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை பாதியாக குறைக்கலாம். வால்நட்ஸில் நல்ல கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்புக்களுக்கு பதிலாக மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களை உட்கொண்டால், உடலில உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில்
  • ஆரோக்கியமான எண்ணெயாக கருதப்படும் ஆலிவ் ஆயிலில் மற்ற உணவுப் பொருட்களை விட சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவான அளவிலேயே உள்ளது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, தமனிச் சுவர்களில் கொழுப்புக்களை படியச் செய்து, இரத்த ஓட்டத்தில் தடையை உண்டாக்கும்.
அவகேடோ
  • அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது.
  • இது உடலினுள் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இதயத்தினுள் நாள்பட்ட அழற்சியால் ஏற்படும் பெருந்தமனி தடிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
ராஸ்ப்பெர்ரி
  • ராஸ்ப்பெர்ரி பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது.மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
கொண்டைக்கடலை
  • கொண்டைக்கடலை மற்றும் இதர பருப்பு வகைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த வகை நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.
சால்மன் மீன்
  • சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 இரத்தம் உறைவதைத் தடுத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும். மேலும் இது இதய நோய்க்கு வழிவகுக்கும் ட்ரைக்ளிசரைடுகள் என்னும் ஒருவகை கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும்.
இதயத்தை காக்க
  •  மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை
  •  எண்ணை அதிகமாக இல்லாத உணவு முறை
  •  தினமும் உடற்பயிற்சி
இவைகளை கடைப்பிடித்தாலே 60 சதவீதம் இதய நோயிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ளலாம்.

Originally published on http://www.news.thedupori.com 


Comments

Popular posts from this blog

அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!

முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!