12 அற்புத எண்ணெய்களின் மருந்துவ குணங்கள்………..!!!!
இயற்கை எண்ணெய்
மூலிகை எண்ணெய் என்பது இயற்கை தாவரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் இயற்கை மூலிகை எண்ணெயே ஆகும் . இது உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு சார்ந்த எண்ணெய் ஆகும் . இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும்
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் Natural fatty acid அடங்கியுள்ளது. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று.
உடல் ஆரோக்கியம் காக்கும் ஆலிவ் எண்ணை சருமத்தையும் வளமாக்கும்.
ஆலிவ் எண்ணெயின் நற்குணங்கள்
பொலிவு அதிகரிக்கும் :
- பொதுவாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம்.
தழும்புகள் மறையும்:
- முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்
நினைவாற்றல்
- ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் K, மூளையின் ஆற்றலை அதிகரித்து, மனத்தைக்கூர்மையாக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால் மற்றும் வைட்டமின் E, செயல் முடக்கத்தைத் தடுக்கும்.
பாதம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் சருமம், உடல் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும்.
சருமத்தைப் பொலிவுபடுத்தும் பாதாம் எண்ணெய்.
கருவளையத்தைக் குறைக்கும்
- நாள் முழுவதும் ஓய்வின்றி கண்கள் வேலை செய்து சோர்வடைந்திருந்தால், அதில் இருந்து பாதாம் எண்ணெய் விடுவிக்கும். அதற்கு பாதாம் எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த எண்ணெயைத் தொட்டு கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறையும் மற்றும் கருவளையமும் நீங்கும்.
ஃபேஷியல் மசாஜ்
- உள்ளங்கையில் சிறிது பாதாம் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின் அந்த எண்ணெய்யை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மென்மையாக சிறிது நேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
- இரவு முழுவதும் எண்ணெய்யை நன்கு ஊற வையுங்கள்.
- மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
- இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கூந்தல் வளர்ச்சி:
- நம்முடைய முடி அடர்த்தியாக வளர வைப்பதில் இந்த பாதாம் எண்ணெய்க்கு மிக பெரிய பங்கு உள்ளது.
- இதில் உள்ள ஊட்ட சத்துக்கள் நம்முடைய முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது.
- இதற்கு நாம் தூங்கும் முன் இரவில் பாதாம் எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலையில் எழுந்து குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் நம் தலை முடி நன்றாக அடர்த்தியாக வளரும்.
சந்தனம் எண்ணெய்
சந்தன எண்ணெய் மன அமைதிக்கும், மன அழுத்த பாதிப்புகளைப் போக்கவும், உடல் சரும வியாதிகளைப் போக்கவும் பயன்ப்படுக்கிறது.
சந்தனக்கட்டை எண்ணெய் போல, சந்தன விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயும் உடல் நலனுக்கு பயனாகிறது.
- அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் மருந்தாகத் தடவி வர வேண்டும் , அவை யாவும் விரைவில் மறைந்துவிடும்.
- சந்தன எண்ணெய் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றது.
- சந்தன எண்ணெய் பக்க வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணையாகவும் உள் மருந்தாகவும் பயன் தருகிறது.
- 1 டீஸ்பூன் சந்தன எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊறவைப்பதால் கரும் புள்ளிகள் மறைந்துவிடும்.
தேயிலை எண்ணெய்:
தேயிலை எண்ணெய், தேயிலை தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கூந்தலில் உள்ள கிருமிகளுக்கு எதிராக செயல்படும். கூந்தலில் உண்டாகும் பொடுகு, தொற்று, ஆகியவற்றை அழித்து கூந்தலை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
தேயிலை எண்ணெய் , தலை அரிப்பிற்கு சிறந்த தீர்வாக அமையும்.
தேயிலை எண்ணெய் மருந்துவ குணங்கள்:-
- தேங்காய் எண்ணெய்யுடன் தேயிலை எண்ணெய்யை சிறு துளி கலந்து தலையில் வாரம் ஒருமுறை தடவி வந்தால் முடி உதிர்தல் நிற்கும். இது கூந்தலில் உள்ள பிசுபிசுப்பு, பொடுகு ஆகிவய்ற்றை போக்கச் செய்து நீளமாக வளர தூண்டும்.
- தேயிலை எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும். தினமும் இவ்வகையில் செய்தால் தலை அரிப்பு நின்று விடும்.
- நீருடன் சிறு துளி தேயிலை எண்ணெய்யை கலந்து முகத்தில் கழுவு வந்தால் விரைவில் கரும்புள்ளி மறைந்து சருமம் சுத்தமாகும்.
- குளிக்கும்போது ஒரு டப் நீரில் சிறு துளி தேயிலை எண்ணெய்யை கலந்து அந்த நீரில் குளித்தால் சரும பிரச்சனைகள் மறைந்து சருமம் புத்துயிர் பெறும்.
வெள்ளைப்போளம் எண்ணெய்
இது ஒரு வாசனைப் பிசின். காமிஃபோரா இனத்தைச் சேர்ந்த பல்வேறு முட்செடிகளிலிருந்தோ சிறிய மரங்களிலிருந்தோ இது எடுக்கப்பட்டது.
வெள்ளைப்போளம் எண்ணெய்யுன் நன்மைகள் அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற குறிப்பிடப்படுபவை. எதி்ர்பூஞ்சை, வைரஸ், எதிர்ப்பு அழற்சி, எதிர்ப்பு ஒட்டுண்ணி, சளி, மற்றும் வலிப்பு போன்றவற்ற நேய்களுக்கு இந்த எண்ணெய் உதவுகின்றது.
வெள்ளைப்போளம் எண்ணெய் மருந்துவ குணங்கள்:-
- வெள்ளைப்போளம் எண்ணெய் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.
- வெள்ளைப்போளம் எண்ணெய் இருமலுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது , சளி, தொண்டை புண் மற்றும் நெஞ்செரிச்சல் இவ்வகையான நோய்களைக் குணமாகும் . இது நெரிசல் குறைக்கலாம் மற்றும் கபம் வெளியேற்ற உதவுகிறது.
- 2 துளிகள் வெள்ளைப்போளம் எண்ணெய்யுடன் ½ ஸ்பூன் தேனை சேர்த்து .அந்த கலவையை முகத்திலுள்ள சுருக்கங்கள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் உலரவைக்கவும் .பிறகு, தண்ணீரால் கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் முகத்திலுள்ள சுருக்கங்கள் மறைவதை காணலாம்.
குங்கிலியம் எண்ணெய்
குங்கிலியம், மத்திய கிழக்கில் பரிசுத்த அபிஷேக எண்ணையாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அது சமய சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது
குங்கிலியம் எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- குங்கிலியம் வெண்ணெய் மேகப் புண், அக்கி, மூலப் புண், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம்.
- இந்த குங்கிலியம் எண்ணெய்யுடன் 4-5 துளி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து .அந்த கலவையை கண்களில் சுருக்கம் உள்ள இடத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் அந்த எண்ணெய்யை துடைத்து எடுக்கவும். வாரம் ஒரு முறை இந்த முறையை முயற்சிக்கவும்.
ரோஸ்மேரி எண்ணெய்:
அரபு நாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஸ்மேரி செடியில் இருந்து வடித்தல் முறையில் இது தயாரிக்கப்படுகிறது. அணுக்கள் பிரிவதை அதிகரித்து. குழந்தைகளுக்கு இரத்தத்தை விரிவடைய . இதனால் இரத்தத்தின் ஓட்டம் அதிகரிகச் செய்கின்றது இந்த ரோஸ்மேரி எண்ணெய்.
- தொண்டைப் புண், பல் ஈறு வலி, நாட்பட்ட ஆறாதபுண் இவைகளைக் குணப்படுத்துகின்றது. இந்த எண்ணெய் ஞாபக சத்தியை அதிகறிக்கின்றது. உடல் அறிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலிகளைக் குணப்படுத்துகின்றது.
லாவெண்டர் எண்ணெய்:
மத்தியகிழக்கு, மத்திய ஆசியா மற்றும் கிரிமியா ஆகிய நாடுகளிலிருந்தும், லாவந்தூள மலர்களின் பிரித்தெடுக்கப்படுகிறது இந்த லாவெண்டர் எண்ணெய்.
லாவெண்டர் எண்ணெய்யை பயன்படுத்தினால் தேவையற்ற நாற்றங்களை மறைக்க நல்ல ஒரு இயற்கையான காற்று சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
லாவெண்டர் ஆயில் மூலம் மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, வறட்சியும் தடைப்படும்.
லாவெண்டர் எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- ஐந்து நிமிடங்கள் சுவாசித்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
- பூச்சிக்கடி, சரும நோய்கள் குணமாகும்.
- நகம் உடையும் பிரச்சனை இருப்பின், நகத்தை சுற்றி இந்த லாவெண்டர் எண்ணையை தடவினால் நகங்கள் ஆரோகியமாகும்.
- பாதவெடிப்புகள், அஜீரண கோளாறுகள் குணமாகும்.
- முடி நன்கு வளரும்.
- முடி உதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். இது ஒரு சிறந்த வாசனை திரவியம்.
அவகேடோ எண்ணெய்:
மலைப்பகுதிகளில் அதிக அளவில் அவகோடா மரங்கள் உள்ளன.அந்த மரத்திலிருந்து பறிக்கப்பட்டு அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கும் எண்ணையே அவகோடா எண்ணெய் ஆகும்.
அவகேடோ ஆயில் மூலம் மசாஜ் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, வறட்சியும் தடைப்படும்.
அவகேடோ எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- அவகேடோ ஆயில் தலைமுடியை வலிமையாக்கவும், அடர்த்தியாக்கவும் செய்யும்.
- அவகேடோ எண்ணெய்யில் தலைமுடியில் உள்ள பாதிப்பை சரிசெய்யத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது.
- அவகேடோ எண்ணெயும் மிகச்சிறந்த வகையில் சிவப்பு வீக்கங்கள், கறைகள் மற்றும் வடுக்களை தோலில் இருந்து நீக்கும். இந்த எண்ணெயை சேவிங் ஜெல்லாகவும், உடல் மற்றும் தலைமுடிக்கான மாய்ஸ்சுரைசர்களாகவும் பயன்படுத்தலாம்.
- சருமம் சிதைவடைவதில் இருந்து தடுக்கிறது. இதுபோல் ஏராளமான சரும மற்றும் ஆரோக்கிய பலன்களைக் கொண்டது அவகேடோ எண்ணெய்.
- இந்த எண்ணெய்யில் நிறைவாக உள்ள ஓலிக் அமிலம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கிறது.
- சாலட்களில் சுவைமிக்க இடுபொருளாகவும், குறைந்த வெப்பநிலையில் சமைப்பதற்கு ஏற்றதாகவும் அவகேடோ எண்ணெய் உள்ளது.
ஜொஜோபா எண்ணெய்:-
ஜொஜோபா ஆயில் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று இருக்காது. ஒருவித மெழுகு போன்று இருக்கும். இதில் துத்தநாகம், தாமிரம், விட்டமின் பி & இ இருக்கிறது.
ஜொஜோபா எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய உதவும் மற்றும் புதிய ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- இது சருமத்தை வலிமையாக்கும்.
- சருமத்தில் எண்ணெய் வழிதல் பிரச்னையை சரி செய்யும்.
- சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி, சருமத்துக்கு பொலிவை தரும். அதேநேரத்தில், வறண்ட சருமத்துக்கும் இது நல்லது.
- எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துவதால் முகப்பரு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தரும். பித்தவெடிப்பு போன்றவற்றை சரி செய்யும்.
- கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் ஜொஜோபா ஆயில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
- இதை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.
ஹாசில்நட் எண்ணெய் :-
ஹாசில்நட் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளதால், எல்லா வகையான சருமங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது எனலாம்.
ஹாசில்நட் எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- இந்த எண்ணெய் சருமத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதையும் தவிர்ப்பதால், கறைகள் உருவாவது தவிர்க்கப்படுகிறது.
- இதில் கட்டுப்படுத்தும் குணங்களும், துளைகளை இறுக்கும் குணங்களும் உள்ளதால், இயற்கை எண்ணெய் அதிகளவில் உடலில் சேர்வதை ஹாசில்நட் எண்ணெய் தவிர்க்கிறது.
ஆளிவிதை எண்ணெய்:-
ஆளி விதைகளால் தயாரிக்கப்பட்ட எண்ணையே ஆளி விதை எண்ணெய் ஆகும் .ஆளி விதை எண்ணெய் குளிர் அழுத்தி ஆளி விதை இருந்து பெறப்படுகிறது.
ஆளி விதை எண்ணெல் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் முடி உதிர்வை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஆளிவிதை எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்:-
- ஆளி விதை எண்ணெயை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை, குழம்பு போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தலாம்
- தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல், தலை பொடுகு, தோல் மென்மையாக்கம், இளைய தோற்றத்தை அளிக்கும் , முகப்பரு மற்றும் தடிப்பு தோல் அழற்சியின் வீக்கம் போன்றவற்றை குறைக்கும் .
வால்நட் எண்ணெய்
- நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும்.
- வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.
வால்நட் எண்ணெய்யின் மருந்துவ குணங்கள்
- வால்நட் எண்ணெய் தோலின் சுருக்கத்தை நீக்குகிறது. இது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது.இதை தொடர்ந்து தடவி வந்தால், இது உங்களுக்கு நல்ல வழியில் உதவி, குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கத்தை மறைய செய்கிறது.
- வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். அணுக்களின் புத்துயிர்ப்புக்கு பொட்டாசியம் பெரிதும் உதவுவதால், அது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
- சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். அதற்கு இதை சாதாரணமாக குளிக்கும் போது குளிக்கும் நீரில் சேர்த்து பயன்படுத்தலாம்.
originally published on: http://www.news.thedupori.com
Comments
Post a Comment