பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க 12 பேஸ் பேக்




வேப்பிலை பவுடர் பேஸ் பேக்


  • வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
  • வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

 

துளசி பேஸ் பேக்


  • துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமங்களில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.
  • சிறிது துளசி இலைகளை சேர்த்து அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.


காபி பவுடர் பேஸ் பேக்


  • காபி பவுடர்,  சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம்  பொலிவுபெறும்.
  • காபி பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.

பூசணிவிதை பொடி பேஸ் பேக்


  • சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி பளிச்சென்றுத் தோற்றத்தை பெறுவதற்கு பூசணி விதை பொடியுடன் தயிர், முட்டை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு டேபிள்ஸ்பூன் பூசணி விதை பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தயிரை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை செய்துவந்தால் சருமம் அழகாகும்.

முல்தானி மெட்டி பொடி பேஸ் பேக்


  • முல்தானி மெட்டி பொடியுடன், ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.
  • 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன், தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் முகத்தில் பொலிவு பெறும்.
  • கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

ஆவாரம் பூ பொடி பேஸ் பேக்


  • ஆவாரம் பொடி, கஸ்தூரி மஞ்சள், கசகசா ஆகியவற்றை நீரில் சேர்த்து கலந்து பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால், வறண்ட சருமம் மாறும். தோல் பளபளப்பாகும்.
  • ஆவாரம் பொடியுடன் பால் சேர்த்து கலந்து வறண்ட சருமத்தில் பூசி சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் வறண்ட சருமம் சரியாகும். தினமும் இவ்வாறு செய்வதால் தோல் எண்ணெய் பசை வர ஆரம்பிக்கும். தோல் மென்மையாகும்.

அவகாடோ பேஸ் மாஸ்க்


  • பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ(Avocado) சிறந்தது. இதில் இருக்க கூடிய எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்..
  • முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள். அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை பொடி பேஸ் மாஸ்க்

  • கற்றாழையின் அற்புதமான ஈரப்பதமான பண்புகள், தோலுக்கு புத்துணர்ச்சியூட்டி பொலிவாக வைத்திருக்க முடியும்.
  • கற்றாழை பொடியுடன் தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்தில் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை  தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவினால் உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
  • சோற்றுக் கற்றாழை பொடியை தினமும் வெண்படையின் மீது பூசிவர வெண்படை குணமாகும்.

முட்டை ஓடு  பொடி பேஸ் மாஸ்க்

  • முட்டையின் ஓடு சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து ஆரோக்கியமான மற்றும் மிருதுவான சருமத்தினை பெற உதவுகிறது. முட்டையின் ஓடினை பொடியுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்து முகத்தில் போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.
  • கற்றாழை ஜெல்லுடன் முட்டை ஓடு பொடியை சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் மிருதுவான மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்



  • நறுக்கிய வெள்ளரிக்காயை நன்றாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின் முகம் சிவப்பொலிவுடன் மற்றும்  மிருதுவான சருமமாக காணப்படும்.


உருளைகிழங்கு ஃபேஸ் பேக்ஸ்

  • உருளைகிழங்கு,எழுமிச்சை சாறு  மற்றும் தேன் சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும் பின் கலவையை முகம் மற்றும்  கழுத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.பின் 15-20 நிமிடம் கழிந்து அதை நீரில் கழுவ வேண்டும். சரும மென்மையாகவும் மற்றும் பொலிவுடன் காணப்படும்.
  • உருளைகிழங்கை வேகவைத்து நன்கு மசித்து  கொள்ளவும். பின்பு பால்,ஓட்ஸ் மற்றும் எழுமிச்சை சாறு சேர்த்து ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும் பின்பு கலவையை முகம் மற்றும் கழுத்தில்  பூசிக் கொள்ள வேண்டும். பின்பு 15-20 நிமிடங்கள் தோலில் வைத்து பின்  வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால்  சருமத்தில் எண்ணெய் பசை   போன்று காணப்படும்.

தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்



  • தர்பூசணி சாற்றில் வாழைப்பழத்தை மசித்து கலந்து, மாஸ்க் போட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை வெளியேற்றி, சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுத்து, முகப்பரு இல்லாத சருமத்தைப் பெற உதவும்.
  • அரைத்த தர்பூசணியுடன் தயிர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் மற்றும் நொதிகள் சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, பொலிவான மென்மையான சருமத்தைப் பெற உதவிபுரியும்.

Comments

Popular posts from this blog

முடி ஏன் உதிர்கிறது? முடி உதிர்வதிற்கான காரணங்கள்? முடி வளர சில குறிப்புகள்……………….!!!!!!!

ஆரோக்கியமான இதயத்தை காக்க வேண்டிய வலி முறைகள் .......!