அல்சர் நோயை குணமாக்க சிறந்த இயற்கை மருந்துகள் ......!
பெப்டிக் அல்சர் ( Peptic ulcer ) அல்சர் என்பது வயிற்றுப்பகுதியில் அமில அரிப்பினால் ஏற்படக்கூடிய புண்ணைக்குறிக்கும். நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மெல்லிய படலத்தை (Mucus Membrane) அரிக்கிறது. இதன் விளைவாக குடலில் புண்கள் ஏற்படும்.அல்சர் பாதிப்பு பெரும்பாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி எனப்படும் பாக்டீரியாக்களின் மூலமாகவும் ஆஸ்பிரின் உட்பட பிற வலி நிவாரண மாத்திரைகளாலும் ஏற்படக்கூடும். பெப்டிக்அல்சரின் வகைகள் : வயிற்றுப்புறணியில் (Stomach Lining) ஏற்படும் அல்சருக்கு காஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer) என்று பெயர். வயிற்றின் மேல்பகுதியில் உணவுக்குழாயின் அடிப்பகுதியின் உள்ளெ ஏற்படும் அல்சருக்கு ஈஸோபாகேல் அல்சர் (Oesophageal Ulcer) என்று பெயர். வயிறையும் சிருக்குடலையும் இணைக்கின்ற வளைந்த உறுப்பான டியோடினத்தில் ஏற்படும் அல்...